அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக மருத்துவபீட காதல் ஜோடி தற்கொலை

பல்கலைக்கழக மருத்துபீடத்தில் கல்வி பயின்று வரும் இளம் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துள்ளது. மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியும், ராகம மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


 காதல் பிரச்சினை காரணமாக குறித்த மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த மருத்துவ பீட மாணவர் சயனைட் அடங்கிய விச ஊசியை ஏற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த மாணவி வேறு ஒரு மாணவருடன் தொடர்பைப் பேணுவதாக எழுந்த சந்தேகமே இந்த பிணக்கிற்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2ம் இணைப்பு காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்கு விஷத்தை கொடுத்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்றே காதலன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். மருத்துவ பீடத்தைச்சேர்ந்த மாணவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மொரட்டுவை பல்கலைகழக மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதே வடகொழும்பு வைத்திய பீடத்தைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 இதில், மொரட்டுவை பல்கலைகழகத்தை சேர்ந்த 24 வயது மகேஷிகா பிரியங்கி குலரத்ன என்ற மாணவியும் அவரது காதலன் என்று சொல்லப்படுகின்ற 25 வயதான அமில சத்துரங்க என்ற மாணவனுமே பலியாகியுள்ளனர். வைத்திய மாணவன் பொல்ஹாவலையிலுள்ள அவரது வீட்டில் வைத்து உடலுக்கு நஞ்சேற்றிக் கொண்ட நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: காதல் விவகாரத்தினால் மனமுடைந்த மாணவி தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் சுகமடைந்த மாணவியை வீட்டுக்கு செல்வதற்கு வைத்தியர்கள் அனுமதியளித்தனர். அன்று பெற்றோர் சமூகமளிக்காமையினால் பெற்றோர் வரும் வரையிலும் மாணவி வாட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவருடைய காதலனான வைத்திய மாணவன் அன்று மாலை 5 மணியளவில் அவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார். இருவரும் கொஞ்சநேரம் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் பால் மற்றும் கடலை பக்கற்றுடன் வாட்டுக்கு வருகை தந்த காதலன் அவற்றை கொடுத்து விட்டு சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. மாணவி பக்கற்றிலிருந்த பாலை குடித்ததன் பின்னர் சத்தம் போட்டதாகவும் பின்னர் சுயநினைவை இழந்து விட்டதாகவும் வாட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் மரணமடைந்துவிட்டார்.

 மாணவிக்குக்கு பால் பக்கற்றை கொடுத்த மாணவனை தேடிப்பார்த்தபோது அவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவியின் உடற்பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்திய மாணவனின் தாயாரும் அரசாங்க வைத்தியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மருத்துவபீட காதல் ஜோடி தற்கொலை Reviewed by Admin on April 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.