மன்னார் கடற்படுகையில் மூன்று எரிபொருள் அகழ்வு படுகைகளுக்கு விலை குறிப்பீடு முன்வைப்பு
மன்னார் கடற்படுகையில் அமைந்துள்ள 13 எரிபொருள் அகழ்வு படுகைகளுக்கான அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைய மூன்று பகுதிகளுக்கான விலை குறிப்பீடுகளை முன்வைக்க இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் முன்வந்துள்ளது.
மன்னார் கடற்படுகையில் தற்போது வெற்றிகரமான முறையில் எரிபொருள் அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கெய்ன் நிறுவனத்துடன் இணைந்தே ஒ.என்.ஜி.சி நிறுவனம் அதற்கான விலைக் குறிப்பீடுகளை முன்வைத்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கெய்ன் நிறுவனம் மன்னார் கடற்படுகையில் ஒரு படுகையில் ஹைதரோகார்பன் அகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றது. கெய்ன் நிறுவனத்துடன் இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஒ.என்.ஜி.சி விலை குறிப்பீடுகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார் கடற்படுகையில் ஹைதரோகார்பன் அகழ்வுக்கான இரண்டாவது அனுமதிப்பத்திரத்திற்கான விலை குறிப்பீடுகள் இம்மாதம் 29ம் திகதியுடன் நிறைவடைகின்றது. 2014 ஆம் ஆண்டு முதலாவது காலாண்டில் இரண்டாவது அகழ்வு பணிகளுக்காக அனுமதியை வழங்க பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகம் தயாராக உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னாரில் ஹைதரோகார்பன் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்காக அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு ஏற்கனவே உலகின் முன்னிலை எரிபொருள் அகழ்வு நிறுவனங்கள் பல விருப்பம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலத்தின் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்கிரமசூரிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
November 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment