அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரச உயர்மட்ட அதிகாரிகள் குழு முல்லைத்தீவு விஜயம்.

மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள்
குழுவொன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது .

இந்த குழுவில் குடியேற்ற அமைச்சின் செயலாளர் , ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் .

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் இந்த குழு பங்கேற்றுள்ளது

கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு , துணுக்காய் , மாந்தை கிழக்கு , மணலாறு , ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களும் , ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் வன்னிப் பிராந்தியந்திற்க்கு பொறுப்பான அதிகாரியும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க தடையாகவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து , குறித்த பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது .

மேலும் இந்த அதிகாரிகள் கேப்பாபிலவு , முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர் .

மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக அரச உயர்மட்ட அதிகாரிகள் குழு முல்லைத்தீவு விஜயம். Reviewed by NEWMANNAR on January 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.