முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களம் 2013 இல் 16,23,500 ரூபா தண்டமாக வசூல்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களத்தினால் கடந்த 2013 ஆம் ஆண்டு கசிப்பு மற்றும் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயம் , கள்ளு விற்பனை சிறு வயதினருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 16 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட ஒருவரும் , கோடா வைத்திருந்த 05 பேரும் , கசிப்பு உடைமையில் வைத்திருந்த 35 பேரும் , அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயம் வைத்திருந்த 08 பேரும் , பியர் வைத்திருந்த ஒருவரும் , கள்ளு விற்பனை செய்த 14 பேரும் , மேலதிகமாகக் கள்ளு வைத்திருந்த 233 பேரும் 21 வயதிற்குட்பட்ட சிறுவருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 40 பேர் உள்ளிட்ட சுமார் 337 பேருக்கு எதிராக கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்ககளின் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் மதுவரித் திணைக்களம் 2013 இல் 16,23,500 ரூபா தண்டமாக வசூல்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2014
Rating:

No comments:
Post a Comment