ராகுல் காந்திக்கு முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா?(வீடியோ இணைப்பு)
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தமிட்ட பெண், தனது கணவரால் தீ வைத்து எரித்து கொல்லப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மாநிலம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அங்கு பல்வேறு பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ஜோர்காத் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்திக்கு, பெண்கள் கை குலுக்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் போண்டி என்பவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போண்டி என்ற பெண்ணுக்கும், அவரது கணவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் வார்த்தைகளால் பயங்கரமாக மோதிக்கொண்டுள்ளனர்.
இறுதியில் அந்த பெண்ணை எரித்து கொலை செய்த கணவர், தானும் தீயை கொளுத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட பெண் கவுன்சிலர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்திக்கு முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா?(வீடியோ இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:


No comments:
Post a Comment