MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றமாக கருதப்படலாம் – நவி பிள்ளை
யுக்ரேய்னின் கிழக்கு பிராந்தியத்தில் MH17 மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது போர்க் குற்றமாக கருதப்படலாம் என ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன், ரஷ்ய ஆதரவுப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக யுக்ரேய்ன் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் யுக்ரேய்ன் இராணுவமே பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ரஷ்யா குற்றஞ்சுமத்துகின்றது.
விமானம் வீழ்ந்த பகுதியை பாதுகாப்பதற்கு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்னர் குறித்த பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமானத்தின் பாகங்களை எடுப்பதற்கும், உயிரிழந்தவர்’களின் சடலங்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரையிலும் முழுமையடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
298 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மீட்கப்பட்ட 200 சடலங்களில் 38 சடலங்கள் பரிசோதனைகளின் பின்னர் நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.
யுக்ரேய்னின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ள ரஷ்ய படையினர், கடந்த 24 மணித்தியாலங்களில் சில ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அநேகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தததை அடுத்தே விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றங்களில் உள்ளடக்கப்படலாம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றமாக கருதப்படலாம் – நவி பிள்ளை
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment