அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது உறுதி – தமிழக மீனவர்கள்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகள் தொடர்பான ஆவணங்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் கையளிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இராமேஸ்வரம் உள்ளிட்ட கரையோர பகுதி மீனவர்கள், மாவட்ட ஆட்சியாளரிடம் தமது படகுகளின் ஆவணங்களை இன்று மாலை கையளிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவிலை என எமது செய்தியாளர் கூறினார். 

 எனினும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர் நந்தகுமார் உறுதியளித்ததாக, தமிழக கரையோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

 மாவட்ட ஆட்சியாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, படகுகளின் ஆவணங்களை கையளிக்கும் போராட்டத்தை கைவிடுவதற்கு தமிழக கரையோர பகுதி மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும், திட்டமிட்ட வகையில் ஆகஸ்ட் 2ஆம் திகதி வெள்ளைக் கொடிகளுடன் படகுகளில் கச்சத்தீவுக்கு பயணித்து, இலங்கை இராணுவத்திடம் சரணடையும் போராட்டத்தை தாம் கைவிடப்போவதில்லை என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது உறுதி – தமிழக மீனவர்கள் Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.