அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழர் மாலைதீவு கடலில் மூழ்கி பலி

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனை கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக வாழ்விடமாக கொண்டிருந்த ஈழ தமிழர் ஒருவர் மாலைதீவு கடலில் மூழ்கி இறந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தியை சொந்த இடமாக கொண்ட கணேசலிங்கம் நமசிவாயம் என்பவரே நேற்று இறந்தார். 

யாழ். மத்திய கல்லூரி, யாழ். பரியோவான் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனான இவர் தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ஆவார். மனைவி, பிள்ளைகள் சகிதம் விடுமுறையில் நாட்டுக்கு வந்த இவர் மாலைதீவுக்கும் சுற்றுலா சென்றபோதே விபரீதம் நேர்ந்து உள்ளது. 

இவர் பாடசாலைக் காலத்தில் சாதனைகள் பல புரிந்த விளையாட்டு வீர்ர் ஆவார். இவரின் தந்தை நமசிவாயம் பிரபல தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது, இவருடைய குடும்பத்தினருக்கு யாழ் மத்திய கல்லுரி பழைய மாணவர்களின் சார்பில் ஜேர்மனியை சேர்ந்த அனஸ்லி இரத்தினசிங்கம் என்பவர் அனுதாபங்கள் தெரிவித்து உள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழர் மாலைதீவு கடலில் மூழ்கி பலி Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.