கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை எழுதும் மாணவன் மீது கத்தி குத்து
கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவன் ஒருவன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று அம்பாலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாலாங்கொடை தேவானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு வெளியேறி வீதியில் சென்றுகொண்டிருந்த மாணவன் மீதே இனந்தெரியாத நபர், இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கத்தியால் குத்தியுள்ளார்.
மாணவனின் இதயத்துக்கு அண்மையிலேயே கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை எழுதும் மாணவன் மீது கத்தி குத்து
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 10, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment