காலிமுகத்திடலில் விசேட ஆராதனை நடத்தவுள்ளார் பாப்பரசர்
இலங்கைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விஜயம் மேற்கொள்ளும் வணக்கத்திற்குரிய பரிசுத்த பாப்பரசர் பிரன்ஸ்சிஸ் ஜனவரி 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை தங்கியிருப்பார் என கொழும்பு பேராயரின் செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் அவர் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13 ஆம் திகதி அதிகாலையில் இலங்கையை வந்தடையும் பாப்பரசர் விமான நிலையத்தில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலகமாக கொழும்புக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
பாப்பரசர் தலைமையில் விசேட ஆராதனை 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் காலை 8.15க்கு நடைபெறவுள்ளது.
அன்றைய தினமே மன்னார் மடு தேவாலயத்திற்கு செல்லும் பாப்பரசர், அங்கு நடைபெறும் ஆராதனைகளின் பின்னர், போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்களையும் அந்த பிரதேசங்களை சேர்ந்த ஆயர்களையும் சந்திக்க உள்ளார்.
காலிமுகத்திடலில் விசேட ஆராதனை நடத்தவுள்ளார் பாப்பரசர்
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 03, 2014
Rating:


No comments:
Post a Comment