முல்லைத்தீவில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை-மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.-Photos
வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில் வடமாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று நன்னீர் மீன் பிடி குளங்கள் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது.
வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டார்.
இதன் போது வவுனிக்குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளும்,முத்தையான் கட்டு குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளும்,மடவால சிங்கம் குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.
இதனால் சுமார் நன்னீர் மீன்பிடி தொழில் ஈடுபடும் 300 குடும்பங்கள் பயனடைவார்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை-மீன்குஞ்சுகளும் விடப்பட்டன.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:

No comments:
Post a Comment