அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலை.யில் சிங்கள மாணவர்கள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுகின்றனர்– விஜயகலா எம்.பி.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவாகள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கேனும் போதியளவு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்களை உள்ளீர்க்கும் வீதம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானர் ஆரோக்கியமானதல்ல, போரின் பின்னர் வடக்கு கிழக்கு கல்வி அபிவிருத்திக்கு அரசாங்கம் வழங்கி வரும் பங்களிப்பு திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை.யில் சிங்கள மாணவர்கள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுகின்றனர்– விஜயகலா எம்.பி. Reviewed by NEWMANNAR on November 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.