அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு

இலங்கையின் தமிழ் எப் எம் வானொலி ஒன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மற்றும் முகநூல் மூலம் தொந்தரவை ஏற்படுத்தி வரும் பெண் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு 2ல் பணியாற்றும் இந்த ஊடகவியலாளர்; வழங்கிய முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தம்முடன் நட்புக் கொள்ளுமாறு கூறியே குறித்த பெண், தொந்தரவு தருவதாக ஊடகவியலாளர் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று கொழும்பு கோட்டை நீதிவான், குறித்த பெண் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கண்டறியுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தமிழ் ஊடகவியலாளரை தொந்தரவு செய்யும் பெண் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on November 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.