அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி கட்சி நிருவாக மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை.



ஐக்கிய தேசியக்கட்சி வன்னி மாவட்டத்தில் கட்சி நிருவாக மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குறித்த தேர்தல் நடவடிக்கைகளை வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான தேர்தல் அமைப்பாளராக ரோகன கமக்கே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்களினால் கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களை நியமனம் செய்வதற்கு கட்சி தலைமையகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


இந்த நிலையில் வன்னி குறித்த வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா,மன்னார் ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு நிரந்தர அமைப்பாளர்களை நியமனம் செய்யும் பொறுப்பு கட்சித்தலைவரான ரணில் விக்கிரம சிங்கவினால் ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் காசிமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் தவிசாளர் கடந்த புதன் கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மியையும் ஏனைய கட்சி பிரமுகர்களையும் சிறிகொத்தாவில் சந்தித்து இது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசீம் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாடுகள் மற்றும் கட்சியினை சேர்ந்த பிரமுகர்களின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடியதாகவும்,தெரிவிக்கப்படுகின்றது.

தற்போழுது ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் நியமனத்தினை பெறுவதற்கு பலர் முயற்சித்து வரும் நிலையில் கட்சித்தலைமை மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கைகளை மிக நெருக்கடியான காலங்களில் முன்னெடுத்தவர்கள் மற்றும் கட்சிக்காக அயராது உழைத்தவர்கள் தொடர்பில் அதீத அக்கறை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான கிளைகள் மற்றும் இளைஞர்,மகளிர் அமைப்புக்களுக்கான கிளைகளை அங்குரார்ப்பணம் செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி கட்சி நிருவாக மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை. Reviewed by NEWMANNAR on November 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.