அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்-Photos


வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் வழி நடத்தலின் கீழ் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் சிநேக பூர்வமான ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் நடமாடும் சேவை ஒன்று இன்று புதன் கிழமை(26-11-2014) காலை மன்னார் உயிலங்குளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உயிலங்குளம்,வண்ணாமோட்டை  ம.வி பாடசாலையில் இன்று புதன் கிழமை(26)குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்றிகோ தலைமையில் ஆரம்பமான குறித்த நடமாடும் சேவையில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோண்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பி.ரி.சுகதபால ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நடமாடும் சேவை இன்று 26 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதாக .மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்றிகோ தெரிவித்தார்.

குறித்த நடமாடும் சேவையானது பொலிஸ் முறைப்பாடுகளை பதிவு செய்தல்,காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்,பொலிஸ் முறைப்பாட்டு பிரதியை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல சேவைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி குறித்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















மன்னாரில் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்-Photos Reviewed by NEWMANNAR on November 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.