அண்மைய செய்திகள்

recent
-

பசு மாட்டு சாணியில்கூட பயிற்சி செய்திருக்கிறேன் – சானியா மிர்ஸா


பசு மாட்டு சாணியில்கூட பயிற்சி செய்திருக்கிறேன் – சானியா மிர்ஸா
பத்திரிகைகளில் தன்னைப் பற்றி தவறாக விமர்சிப்பதை, இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நூதனமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

”நான் போட்டிகளில் பங்கேற்காத நேரத்தில் மட்டுமே பத்திரிகைகளைப் படிப்பேன். ஏனெனில் அப்போதுதான் என்னைப் பற்றி அதில் தவறாக எந்தத் தகவலும் இடம்பெற்றிருக்காது. விமர்சனங்களில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தங்கள் வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டையோ, டென்னிஸ் மட்டையையோ தொடதவர்கள்தான் என்னைப் பற்றி விமர்சிக்கின்றனர் என நினைக்கிறேன்.

2010 இல் காயம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டேன். அப்போதுதான் திருமணமும் நடந்திருந்தது. என்னால், அப்போது போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. முற்றிலும் செயலிழந்தது போல இருந்தேன்.

நான் தற்போது தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளேன். ஓய்வு பெறுவதற்குள் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வேண்டும்.

சிறு வயதில் சில நேரங்களில் நான் பசு மாட்டின் சாணியை வைத்து கூட பயிற்சி செய்திருக்கிறேன்.” என்கிறார் சானியா.
பசு மாட்டு சாணியில்கூட பயிற்சி செய்திருக்கிறேன் – சானியா மிர்ஸா Reviewed by NEWMANNAR on November 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.