அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளுக்கிடையிலான பேச்சு வார்த்தை தோல்வி-Photos,Video

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை நடாத்த அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று(3) புதன் கிழமை காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்ற போது கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மன்னார் வர்த்தக சங்க பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் இருந்து வெளி நடப்பு செய்தமையினால் குறித்த கலந்துரையாடல் இடை நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,,

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை நிறுத்தக்கோரி மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை(2) மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் தலைமையில் மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது வர்த்தக சங்க பிரதி நிதிகள்,மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட்,நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர்களான இ.குமரேஸ்,எஸ்.பிருந்தாவனநாதன்,என்.நகுசீன்,நகர சபை பணியாளர்கள் மற்றும் மாதர் சங்கம்,கிராம அபிவிருத்திச்சங்கம்,மீனவ சங்கம் ஆகியவற்றின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே மன்னார் நகர சபையின் இறுதி கூட்டத்தில் மக்களின் நலன் கருதியும்,மன்னாரில் உள்ள நிறந்தர வர்த்தகர்களின் நலன் கருதியும் பண்டிகைக்கால தெருவோர வியாபார நடவடிக்கைகளின் கால எல்லையை மட்டுப்படுத்தி எதிர் வரும் 21 ஆம் திகதி தொடங்கம் 31 ஆம் திகதி வரையிலான 10 தினங்களுக்கு குறித்த வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இன்றைய தினம் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து பேர்ச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் போது காலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மன்னார் மக்களின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தெருவோர வியாபார நடவடிக்கைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும், 10 நாட்களுக்கு காணாது எனவும்,மேலும் நாட்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு வர்த்தக சங்க பிரதி நிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நீண்ட நேரம் வாக்குவாதம் இடம் பெற்ற நிலையில் தீடிர் என வர்த்தக சங்க பிரதி நிதிகள் கலந்துரையாடல் இடம் பெற்ற மண்டபத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர்.இதனால் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.






மன்னார் நகர சபை மற்றும் மன்னார் வர்த்தக சங்க பிரதி நிதிகளுக்கிடையிலான பேச்சு வார்த்தை தோல்வி-Photos,Video Reviewed by NEWMANNAR on December 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.