அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி மன்னார் வர்த்தகர்கள் கண்டனப்பேரணி-Photos


பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி மன்னார் நகர சபைக்கு எதிரான கண்டனப்பேரணி ஒன்றை மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகர்கள் மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் மன்னார் பஸார் பகுதியில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் குறித்த கண்டனப்பேரணியில் ஈடுபட்டனர்.

மன்னார் நகரில் எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரம் தொடர்பில் நகர சபையால் வழங்கப்படவுள்ள கடைகளை நிறுத்துமாறு மன்னார் நகர சபை தலைவர்,செயலாளர்களுக்கு மன்னார் நகர வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தல்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மன்னார் நகர வர்த்தக சங்க நிர்வாகம் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி முழு அளவிலான கடை அடைப்பை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக குறித்த கண்டனப்பேரணி இன்று மன்னார் பஸார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.வர்த்தக நிலையங்களை மூடிய வர்த்தகர்கள் காலை 10 மணயிளவில் மன்னார் பஸார் பகுதியில் ஒன்று கூடினர்.

பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் நகர சபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.பின் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வர்த்தக சங்கத்தின் சார்பாக மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட நகர சபையின் தலைவர் இவ்விடயம் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள் ஆகியோரின் கருத்துக்களை பெற்று சில தினங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் ஆகியோறும் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.

மன்னார் பஸார் பகுதியில உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டமையினால் தூர இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.















பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி மன்னார் வர்த்தகர்கள் கண்டனப்பேரணி-Photos Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.