அண்மைய செய்திகள்

recent
-

ரிசாத் பதியூதீன் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கும் ஏசிய செல்லப்பிள்ளை: விமல் வீரவன்ச

ரிசாத் பதியூதீன் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கும் ஏசிய செல்லப்பிள்ளை. புத்தளத்தில் ஒரு மரணத்திலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளார் என விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பத்தரமுல்லை, மாலபே கடுவளையில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

ஹக்கீம் - சம்பந்தன் இணைந்து வடகிழக்கை இணைத்து அதில் முஸ்லீம் அரபு வசந்த பிராந்தியத்தை பெற்றுக்கொள்வார்.

டயஸ்போரா மற்றும் வெளிநாட்டு தூதுவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஹக்கீம், சம்பந்தன் இயங்குவார்கள். இவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் உடன் இருந்து குழி பறிப்பார்கள் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த நாட்டுக்கும் சொல்லியிருந்தேன்.

அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா தனது  தனிப்பட்ட செயலாளரை பொலனறுவையில் வைத்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் உள்ளதாகவும் விமல் தெரிவித்தார்.

மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது சர்த்து, வடக்கில் உள்ள இராணுவம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த நாட்டின் பிரிவினைவாதம், வட கிழக்கு மீள ஒன்றிணைப்பது பற்றி பொலிஸ், காணி அதிகாரம் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்.

இந்த கூட்டமைப்பில் உள்ள சம்பிக்க ரணவக்கவும், அத்துரலிய தேரோவும் இந்த நாட்டு பௌத்த மக்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் இந்த நாட்டில் ஹக்கீமுக்கு ஒரு பிராந்தியம், சம்பந்தனுக்கு ஒரு பிராந்தியம் என இந்த நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை

அவர் தோல்விபெற்றாலும் சரி. அவர் ஒரு போதும் இந்த நாட்டை பிரிவினைக்கு துணை போகமாட்டார் என தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியூதீன் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கும் ஏசிய செல்லப்பிள்ளை: விமல் வீரவன்ச Reviewed by NEWMANNAR on December 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.