ஏமாற்றங்களுக்கு விடைகொடுக்க சபதம் செய்வோம்-புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் செல்வம்,வினோ
செயற்கையான யுத்தம் ஒன்றினுள் அமிழ்ந்து போன தமிழினமும்,தாயக தேசமும் மெல்ல மெல்ல மீண்டு வருகையில் இயற்கை யுத்தம் ஒன்று இரக்கம் காட்ட மறுத்து மீண்டும் தலை நிமிர விடாது தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது.
வெள்ளக்காட்டுக்குள், இடம்பெயர்வுகளுக்குள் நின்று கொண்டு புதிய வருடத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில், நடப்பு வருடத்தின் இறுதி நாட்களை எமது மக்கள் சாபத்தோடு நகர்த்திவிட்டு நடுத்தெருவில் நிற்பினும் நம்பிக்கை என்ற அசுர பலம் மட்டும் எம்மை விட்டு நீங்கிச் சென்று விடவில்லை.
அந்த நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கி, புதிய ஆண்டின் மாற்றம் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள எம்மை தயார்ப்படுத்திக்கொள்வோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
ஏமாற்றங்களுக்கு விடைகொடுக்க சபதம் செய்வோம்.நாளும் பொழுதும் இறைவனை வணங்கி துதிக்கும் நாம் இயற்கையை வணங்கவும்,நினைக்கவும் மறுத்து நிற்கின்றோம்.இறைவனும், இயற்கையும் இணங்க மறுக்கும் போது ஏற்க மறுக்கின்றோம்.
இப்புதிய ஆண்டில் எதையும் ஏற்றுக்கொள்ளவும் , சவால்களை சந்திக்கவும் இறைவனும் இயற்கையும் எமக்கு முழுப் பலத்தையும், சக்தியையும் கொடுக்க வேண்டுமென பிரார்த்தித்து நிற்போம். கனவுகளையும் நம்பிக்கைகளையும் இன்னுமின்னுமாக சுமந்து நிற்போம்.
நனவாகும் நாட்கள் அடுத்து வரும் ஆண்டின் மாதங்களில், வாரங்களில், நாட்களில் ஒன்றாகும் என நம்புவோமாக என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமாற்றங்களுக்கு விடைகொடுக்க சபதம் செய்வோம்-புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் செல்வம்,வினோ
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:

No comments:
Post a Comment