இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை
இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான வாகனங்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு இலக்கத் தகடு அற்ற வாகனங்களை செலுத்திய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதன்படி எதிர்வரும் சில நாட்களுக்கு வாகன இலக்கத் தகடுகள் அற்ற வாகனங்கள், பதிவு செய்யப்படாத வாகனங்கள், போலி இலக்கங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள, இலக்கங்கள் தெளிவற்ற வாகனங்கள் போன்றன கைது செய்யப்பட உள்ளது.
வீ.ஐ.பீ மற்றும் வீ.வீ.ஐ.பீ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளததாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment