4 அறைகளை திறக்குமாறு எதிரணி கோரிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டத்தில் பூட்டப்பட்டு கிடக்கின்ற நான்கு அறைகளை திறந்து சோதனைகளை நடத்துமாறு எதிரணியினர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூட்டப்பட்டிருக்கின்ற நான்கு அறைகளில் பெருந்தொகையான வாக்குச்சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் எதிரணியினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
மண்டப வளாகத்துக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய,ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அத்துரலிய ரத்னதேரர் அங்கிருக்கும் பொலிஸாரிடமே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.
4 அறைகளை திறக்குமாறு எதிரணி கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment