ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதியை கடலில் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தோனேசியா அருகே உள்ள ஜாவா கடலில் 11 நாட்களுக்கு முன்னர் இந்த பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் வால் பகுதியில்தான் விமானத்தின் ஒலி மற்றும் விமானப் பறத்தல் தொடர்பான பதிவுகள் செய்யப்படும் கருவி இருக்கும் என்பதல் இந்த கருவிகள் விரைவில் மீட்கப்படும் என்ற நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் நொறுங்கிய பாகங்களைக் கண்டறியும் முயற்சி தடங்கலுக்குள்ளானது.
இந்த வால் பகுதி, துகள்கள் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்ட இரண்டாம் நிலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் முலம் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கடலின் பலமான நீரோட்டங்கள் நகர்த்தியிருக்கின்றன என்ற கருத்து வலுப்பெறுகிறது.
ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:


No comments:
Post a Comment