மலரும் புத்தாண்டில் நாம் முகம் கொடுத்த அனைத்து துயரங்களும் நீங்க வேண்டும்- எஸ்.பிரிமூஸ் சிராய்வா
நிலையான சமாதானம்,இனங்களுக்கிடையில் ஜக்கியம் ஏற்பட்டு அனைத்து இன மக்களும் சகல சௌபாக்கியம் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்க்கையினை வாழ்வதற்கான வருடமாக இப் புத்தாண்டு திகழ வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,,
இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் புது வருடத்தின் முதல் நாளை எதிர் பார்த்துள்ளனர்.கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் முகம் கொடுத்த பல அவலங்கள்,துயரங்கள்,கஸ்டங்கள்,தற்போது அகன்று வருகின்றது.
எனினும் வன்மமும்,சூழ்ச்சியும்,பலாத்காரமும்,பயமுறுத்தலும், அதிகார துஸ்பிரையோகமும் நம் அனைவரையும் சூழ்ந்துள்ளது.அதர்மமும்,அநீதியும்,அகங்காரமும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
மலரும் புத்தாண்டில் இவை அனைத்தும் நீங்க வேண்டும்.அனைத்து இன மக்களின் சகல விடையங்களும் சுபமாக நிறைவுருதல் வேண்டும்.
நோயற்ற சௌக்கிய வாழ்வும்,பொருளாதார மேம்பாடும்,நிலையான குதுகலமுமான மகிழ்ச்சி ததும்பும் நிலையினை அனைத்து இன மக்களும் எய்துதல் வேண்டும் என அவ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலரும் புத்தாண்டில் நாம் முகம் கொடுத்த அனைத்து துயரங்களும் நீங்க வேண்டும்- எஸ்.பிரிமூஸ் சிராய்வா
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:
No comments:
Post a Comment