அண்மைய செய்திகள்

recent
-

பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடு திருத்தல வீதிகள் புனரமைக்கப்படும்!- வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்-Photo

பரிசுத்த பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் வருகயை முன்னிட்டு இன்று(3) சனிக்கிழமை காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மடு திருத்தலத்துக்கு வருகை தரக்கூடிய அனைத்து பாதைகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அவைகளை உடனடியாக புனரமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கமைவாக கலந்துரையாடல் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீதிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

தற்போது உள்ளக வீதிகளை செப்பனிடத் தொடங்கியிருக்கும் மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை அமைச்சர் டெனீஸ்வரன் பாராட்டினார்.

அத்துடன் இந்த அனைத்து வீதிகளும் பரிசுத்த பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளுக்கு வடமாகாண அமைச்சர் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.






பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடு திருத்தல வீதிகள் புனரமைக்கப்படும்!- வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்-Photo Reviewed by NEWMANNAR on January 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.