மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2 தேர்தல் வன்முறைகள் மாத்திரமே பதிவு- மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய
மன்னார் மாவட்டத்தில் உள்ள 70 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று புதன் கிழமை காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,இது வரை தேர்தல் வன்முறைகள் குறித்த 2 முறைப்பாடுகள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
-அவர் ஊடகவியலாளர்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
-குறித்த தேர்தல் பணிக்காக ஆயிரம் அரச அதிகாரிகள் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.70 வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 248 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பாதை சீரின்மையினால் விசேட வானூர்தி மூலம் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு அதிகாரிகளும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் 569 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகளும் பரிசீலிக்கப்பட்ட போது அவை பாரதூரமானவை இல்லை.
-வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தேர்தலுக்கு இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான 20 பேரூந்துகளும்,தனியார் பேரூந்துகள் 8 மற்றும் அரச திணைக்கள வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை மாலை தேர்தல் முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 06 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2 தேர்தல் வன்முறைகள் மாத்திரமே பதிவு- மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:

No comments:
Post a Comment