மன்னார் மாவட்டச்செயலகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு.-Photos
வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 70 வாக்குச் சாவடிகளுக்கான வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இன்று (7) காலை 11 மணிமுதல் குறித்த வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 78,433 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 70 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 32 வாக்குச்சாவடிகளும், நானாட்டான் பிரதேசச் செயலளர் பிரிவில் 12 வாக்குச் சாவடிகளும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 வாக்குச் சாவடிகளும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 வாக்குச் சாவடிகளும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 12 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச்செயலகத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
January 07, 2015
Rating:

No comments:
Post a Comment