மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்தத் தடை
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு வலயக் கல்விப் பணிமனை தடை விதித்துள்ளது
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்துமாறு தெரிவித்து வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகின்ற அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தடையை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்தத் தடை
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:


No comments:
Post a Comment