அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அமைக்கப்பட்ட கிணற்றை காணவில்லை - பிரதேச செயலகமும்,பிரதேச சபையும் தேடல்.


கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மன்னார் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச பிரிவுகளிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரண பணிகள், வெள்ள நிவாரண பணிகள் போன்றவற்றில் பல்வேறு ஊழல் மோசடிகள் நடைபெற்றமை யாவரும் அறிந்ததே.

நிவாரண பணிக்கென வந்த பெருமளவு கிழங்கு, வெங்காயம் என்பன மக்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்த அதிகாரிகளும் பழிவாங்கப்பட்டமையும் யாவரும் அறிந்ததே.

இதைவிட அதே அமைச்சின் அதிகாரிகளால் பல பிரதேச பிரிவுகளிலும் கிணறுகள் அமைக்கப்பட்டமையும் அக்கிணறுகள் காணாமல் போனமையும் அவ்விடயம் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு தெரிந்நிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாந்தை மேற்கு பிரதேச செயலகபிரிவில் அமைக்கப்பட்ட கிணற்றில் தண்ணீர் இருக்கவில்லை.

இக்காலப்பகுதியில் கிணறு அமைக்க நிதி வழங்கியவர்கள் பார்வையிட வரும் போது பௌசரில் நீரைக் கொண்டுவந்து கிணற்றில் அடித்து அவர்களுக்கு காட்டிய சம்பவமும் மாந்தை மேற்கில் நடைபெற்றது.

இதற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளரும் உடந்தை எனக் கூறப்படுகின்றது.இதை உடனடியான உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாங்க அதிபரை கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வீதிகள் அமைத்தல் , கல்வெட்டுக்கள் அமைத்தல் தடுப்புசுவர் அமைத்தல் என பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக் குட்பட்ட சில வீதிகளும் சில கல்வெட்டுக்களும் நகர சபையின் அனுமதி இன்றி அமைக்கப்படடுள்ளது.

அதற்கு மன்னார் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. இவ்வேலைகளை எந்த தொழில் நுட்ப உத்தியோகத்தரும் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவ் வேலைகளுக்கு அதிகளவான மதிப்பீடு செய்யப்பட்டு பணம் வீண்விரையம் செய்யப்பட்டுள்ளமையை குறித்த வேலைகளை பார்வையிடுவதன் மூலம் அறிய முடியும்.

மாவட்டத்தில் தேவையான பல்வேறு வேலைத்திட்டங்கள் இருக்கும் போது தமது சுய இலாபம் கருதி செய்யப்படும் வேலைகளுக்கு அனுமதியளிப்பதை சம்மந்ப்பட்ட மேலதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தோடு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் . அல்லது குறித்த விடயங்கள் ஆதாரத்துடன் பிரசுரிக்கப்படும்.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அமைக்கப்பட்ட கிணற்றை காணவில்லை - பிரதேச செயலகமும்,பிரதேச சபையும் தேடல். Reviewed by NEWMANNAR on April 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.