அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் செயலமர்வு-Photos

இலங்கை தேசிய சமாதானப்பேரவையின்  சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்புவதற்கான சர்வமத மற்றும் சமூக தலைவர்களின் ஒத்துழைப்பைப்பலப்படுத்துதலும் அதற்கான ஊடகப்பங்களிப்பை மேம்பாடு செய்தலும் எனும் தொனியில் 28-03-2015 சனிக்கிழமை அன்று ஒரு நாள் செயலமர்வாக ஞாநோதயம் தாழ்வுபாடு வீதி மன்னாரில் நிகழ்வு நடைபெற்றது.

எமது நாட்டில் வாழும் மக்களை நல்வழியில் இட்டுச்செல்ல அஹிம்சை-சமூகநீதி-சகோதரத்துவம்-கருணை-பொறுமை-பெருந்தன்மை போன்ற குண அம்சங்கள் தொடர்பாக சமயபடிப்பினைகள் மூலம் தனிநபர்களுக்கு பெருமளவில் பகுத்தறிவைப் பெற்றுக்கொடுக்க முடியும் இக்கருத்தினை மையப்படுத்தி 2010 தொடக்கம் இன்று வரை புத்தளம் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சர்வமதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடக்கிய மாவட்ட சர்வமத கமிட்டிகள் இரண்டு செயற்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஹான் பெரேரா நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் துசார ரணசிங்க கலந்து சிறப்புரையாற்றியதோடு மன்னார் யாழ்ப்பாணம் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த முகாமையாளர்கள் திட்ட உத்தியோகத்தர்களுடன் அவ் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.





























மன்னாரில் இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் செயலமர்வு-Photos Reviewed by NEWMANNAR on April 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.