அண்மைய செய்திகள்

recent
-

முழங்காவில் கிராமத்தில் ஒரு தொகுதி சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு.



முழங்காவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரியவன்சா தலைமையிலான பொலிஸ் குழுவினர் நாகப்படுவான் ஜெகநாதன் குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(31) காலை தேடுதல்களை மேற்கொண்ட போது ஒரு தொகுதி மதுபானப் போத்தல்களை கைப்பற்றியுள்ளர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் விசேட தேடுதல்களை மேற்கொண்ட போது சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 35 அரச மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரியவன்சா தெரிவித்தார்.
முழங்காவில் கிராமத்தில் ஒரு தொகுதி சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு. Reviewed by NEWMANNAR on April 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.