அண்மைய செய்திகள்

recent
-

3 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள உலகின் ஆடம்பர காரை வாங்கும் கார்களின் காதலர்


அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஒருவர் தனது கார்களின் வரிசையில் புதிதாக ஒரு ஆடம்பர காரை இணைக்கவுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல குத்துச்சண்டை வீரரான ஃபொலொய்ட் மேவெதர்.

உலகளவில் அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இவர் கார் காதலரும் கூட.

பெராரி, போர்சி, லாம்போர்கின், புகாட்டி, என ஏராளமான ஆடம்பர கார்களை வைத்துள்ளார். மேலும் 30 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள Gulfstream v ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் புதிதாக Koenigsegg ccxr Trevita என்ற ஆடம்பர காரை வாங்க முடிவு செய்துள்ளார். இந்த கார் 2.9 வினாடிகளிலேயே 60 மேல் வேகத்தில் செல்லக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை 3 மில்லியன் பவுண்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் உலகிலேயே மூன்று மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





3 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள உலகின் ஆடம்பர காரை வாங்கும் கார்களின் காதலர் Reviewed by Author on July 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.