தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் ஆகியோருக்கு ஆதரவு கோரி முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் 19.07.2015 அன்று வவுனியாவில் நடைபெற்றது.
புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலக முன்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் க.பிறேமச்சந்திரன் கலந்துகொண்டு பிரசார கூட்டத்தை தொடக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, து.ரவிகரன், எம்.பி.நடராஜா ஆகியோரும், வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திரு.பாலசுப்பிரமணியம், மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திரு.தனிநாயகம் ஐயா,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் திரு.கி.தேவராசா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் திரு.பா.நவரட்ணம், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் விளையாட்டு கழக பிரதிநிதிகள், கிராம-மாதர் அபிவிருத்திச்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்விச்சமுகத்தினர், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பெருந்தொகையானோர் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் திரு.துசியந்தன் தலைமையிலான ஈரோஸ் கட்சி வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகருமான திரு.செந்தில் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு, ‘தாம் தனித்து நின்றும், உதிரிகளுக்கு ஆதரவளித்தும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவளித்து பிரசாரங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
July 20, 2015
Rating:

No comments:
Post a Comment