மன்னார் அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்யில்-இந்நிய உயர்ஸ்தானிகர் கௌரவ ஏ.நடராஜன் அவர்கள்-முழுமையான படங்களுடன்
மன்னார் அல்அஷ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது இன்று 28-01-2016 மாலை 3-00 பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வருடாந்த இல்லவிளையாட்டுப்போடடியின் இறுதி நாள் நிகழ்வுகளாக 28-01-2016 மாலை 3-00 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்நிய உயர்ஸ்தானிகர் கௌரவ ஏ.நடராஜன் அவர்களும் கௌரவ அதிதியாக மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் திருவாளர் கே.எஸ்.வசந்தகுமார் அவர்களுடன் பாடசாலை முதல்வர் ஜனாப் எம்.வை.மாஹிர் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச்சங்க நிர்வாகிகள் பழைய மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டணர்.
நிகழ்வுகளாக சிறுவர்களுக்கான ஓட்டம் சிறுவர்கண்காட்ச்சி சிறுவர் விளையாட்டுகள் மாணவமாணவிகளுக்கான அஞ்சலோட்டம் இல்லங்கள் பார்யையிடல் அணிவகுப்பு என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வெற்றிபெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி வைத்த இந்நிய உயர்ஸ்தானிகர் கௌரவ ஏ.நடராஜன் அவர்கள் தனதுரையில் இவ்வாறான மெய்வல்லுநர் போட்டிகளானது மாணவர்களின் திறமையினை வெளிக்கொண்டுவருவதோடு அவர்களின் ஆளுமையினையும் விருத்தி செய்யும் எமது இந்நிய துணைத்தூதரகமானது யாழ்ப்பாணத்தில் அமைந்திருப்பதின் பிரதான நோக்கம் எமது உறவுகளோடு நெருங்கி இருப்பதற்கும் சமூக உறவை மேம்படுத்துவதோடு எமது மாணவச்செல்வங்களின் கல்விச்செயற்பாட்டிற்கு முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்காகவும் அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களில் 42000 வீடுகளில் இன்னும் 3000 வீடுகள் தான் இன்னும் மீதமாகவுள்ளது அதையும் மிகவிரைவில் கட்டி மக்களிடம் ஒப்படைத்து விடுவோம்.
ஏற்கனவே பாடசாலை சமூகத்தினரின் வேண்டு கோளுக்கு அமைய இப்பாடசாலைக்கு பொது மண்டபம் ஒன்றை கட்டித்தருவதாகவும் அத்தோடு புலமைப்பரிசில் மூலம் இந்தியாவிற்கு சென்று கல்வி கற்ற விருக்கின்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கத்தனது இந்தியத்தூதரகம் தயாராகவுள்ளது அத்தோடு எம்மால் இயன்ற அளவு உதவிகளை இப்பாடசாலைக்கு வழங்குவோம் என்று தனது உரையினை நிறைவு செய்யதார்.
மேலும் பல நிகழ்வுகள் பரிசளிப்புகள் இடம் பெற்று 2016ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இனிதே நிறைவுற்றது.
மன்னார் அல்-அஷ்ஹர் தேசிய பாடசாலையின்  இல்ல விளையாட்டுப்போட்யில்-இந்நிய உயர்ஸ்தானிகர் கௌரவ ஏ.நடராஜன் அவர்கள்-முழுமையான படங்களுடன்
 
        Reviewed by Author
        on 
        
January 29, 2016
 
        Rating: 
      

No comments:
Post a Comment