மன்னார் பேசாலையில் 14அணிகள் மோதும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-28-02-2016
அமரர் கா.நல்லதம்பி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட (ஓவர்) சுற்றுப்போட்டிமன்னார் பேசாலை அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் 02ம் ஆண்டு ஞாபகர்த்த தினத்தை முன்னிட்டு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர்) காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் 28.02.2016ம் திகதியின்று காட்டாஸ்பத்திரி ஜங்மேன் விளையாட்டு கழகத்தின் கொடியேற்றத்துடன் அவரின் நண்பர்கள் மற்றும் நலன் விருப்பியினரின் ஒத்துழைப்புன் ஆரம்பமானது.
குறித்த போட்டியில் 14 அணி பங்குபற்றி விளையாடியது. இப்போட்டியின் எருக்கலம்பிட்டி அல்-பலாஹ்
A அணியிம் -காட்டாஸ்பத்திரி ஜங்மேன்
Aஅணியும் மற்றும் சிறுத்தோப்பு
ATS Boys அணியும்- எருக்கலம்பிட்டி அல் - பலாஹ்
B, semi-final க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிபோட்டி அமரர் கா.நல்லதம்பி நினைவு தினமான 02.03.2016ம் திகதியன்று பி.ப. 03.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டிக்கு அனுசரனையாளராக யு.ரெட்ணம் (துரை அண்ணன்) லண்டன் பா.வசந்தகுமார் (ஆவுஸ்ரேலியா) மற்றும் நண்பர்கள் நலன் விரும்பிகள். ஆதரவுடன் மிகவும்சிறப்பாக நடைபெறும்....
மன்னார் பேசாலையில் 14அணிகள் மோதும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-28-02-2016
Reviewed by Author
on
February 29, 2016
Rating:
Reviewed by Author
on
February 29, 2016
Rating:









No comments:
Post a Comment