மன்னார் ஜீவபுரத்தில் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில்-கொலையில் மர்மம் நிலவுகின்றது….படங்கள் இணைப்பு
மன்னார் எமில் நகர் கிராமபிரிவைச்சேர்ந்த ஜீவபுரத்தில் 6ம் ஒழுங்கையில் உள்ள கல்வீட்டு அறையினிலே இளைஞன் தூக்கிட்டு இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது இறந்த இளைஞன் றொபட் பெரேரா வயது 17 தந்தை எம்.பீற்றர் பெரேரா பெயின்ரராகவும் தாய் செபஸ்ரிக்கா வெளிநாடான குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிகின்றார். தம்பி ஆகாஷ் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதால் தந்தையும் தம்பியுடன் ஜீவபுரத்தில் 6ம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
(கடந்த 1-06-2016 தனது 17 பிறந்த நாளை கொண்டாடியுள்ளான்)
இறந்த இளைஞன் எழுத்தூர் அலிஸ்ரன் ரயர் கடையில் இரண்டு கிழமையாக வேலை செய்து வந்ததாகவும் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து போனபின்பு இன்று வரை வேலைக்கு வரவே இல்லை என சவுரி மரியநேசன் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர்களுடன் இருந்து விட்டு மாலை 4-00 மணிக்கு குறித்த வீட்டுக்கு வந்த பின்பு எவருடனும் தொடர்பையோ தொலைபேசியிலோ கதைக்கவில்லை நான்கு நாட்களாக காணத படியினால் சந்தேகம் கொண்ட நண்பர்கள் இன்று காலையில் இறந்த இளைஞனின் தந்தையிடம் விசாரித்த போது என்னுடன் சண்டை போட்டான் கதைக்கவில்லை எங்காவது நண்பர்களின் வீட்டுக்கு போயிருப்பான் வருவான் என்று கூறிருக்கின்றார்.
இதற்கிடையில் நான்கு நாட்களாக வீடு பூட்டிய நிலையில் இருப்பதாகவும் அவ்வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் அயல்வீட்டார் இன்று காலையில் 29-06-2016 பொலிஸ்க்கு தகவல் வழங்கியதையடுத்து.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த இளைஞன் இறந்த வீட்டை முழுமையாக பார்வையிட்டபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையிலே உடலில் இருந்து புழுக்கள் வெளிவந்துகொண்டு இருப்பதோடு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் கண்டதையடுத்து….
பொலிஸ் அதிகாரிகள் தங்களது விசாரணையை பல கோணங்களில் இறந்தவரின் தந்தை நண்பர்கள் அயலவர்கள் வேலை செய்த கடையின் உரிமையாளர் எல்லோரிடமும் விசாரிக்கப்பட்டு முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் எந்தவித தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடாதவன் என்றும் ஏன் அவன் துக்கிட்டு இறந்து போனான் என்பது சந்தேகமாகவுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்
இச்சம்பவம் திட்டமிட்ட கொலையா…. தற்கொலையா…. என்பது இன்னும் தெரியாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றது..

Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment