அண்மைய செய்திகள்

recent
-

உயிர்பிழைக்க மாட்டேன்...ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த 10 வயது சிறுமியின் கதறல்!


இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிமிடருந்த 10 வயது சிறுமியை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

இராக்கின் வடக்கு மாகாணத்தில் உள்ள மோசுல் என்ற பகுதியை ஐஎஸ் இயக்கத்தினர் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களிடம் சிக்கி தவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஐஎஸ் இயக்கத்தினரிடம் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மீட்பதற்கு இராக் அரசுடன் இணைந்து அமெரிக்காவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மோசுல் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் உள்ள பகுதியை மீட்பதற்காக அமெரிக்க படைகள் முயற்சி செய்து வருகின்றன. அதன் பயனாக 10 வயது சிறுமியான ஆயுசா என்ற சிறுமியை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து ஆயுசா கூறுகையில், இராக்கின் மொசுல் மாநகரம் காபெர் கிராமத்தில் இருந்து 18 கி.மீற்றர் தொலைவில் உள்ளதாகவும், இங்கு தான் கடந்த இரண்டு வருடமாக சிக்கி கொண்டு தவித்ததாகவும் கூறினார்.

அவர்கள் தன்னுடைய அப்பாவை கொலை செய்து விட்டதாகவும், இதனால் தானும் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தாகவும் என கூறியுள்ளார்.

தனக்கும் தன்னுடைய அம்மாவிற்கும் கடந்த மூன்று நாட்களாக சாப்பிடுவதற்கு உணவு மற்றும் தண்ணீர் கூட அவர்கள் கொடுக்கவில்லை என்றும் பல குழந்தைகள் அவர்களிடம் சிக்கி தவிப்பதாகவும், அவர்கள் யாராவது ஒருவர் கொலைசெய்யப்படுவதும் அரங்கேறி வருவதாக கூறினார்.

மேலும் தன்னுடைய தாய் தான் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று நினைத்த தன்னை காப்பாற்றிய உங்கள் பாதத்தை தொட்டு முத்தம் கொடுக்க வேண்டும் என்றும், நீங்கள் இங்கு வரமாட்டீர்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் வந்து விட்டீர்கள் என கூறி சாப்பிடுவதற்கு கொடுத்த ரொட்டித் துண்டு மற்றும் தண்ணீர் பாட்டிலை வெகு விரைவாக வாங்கி சாப்பிட்ட சம்பவம் இராணுவவீரர்களை கண்கலங்க வைத்ததுள்ளது.



உயிர்பிழைக்க மாட்டேன்...ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த 10 வயது சிறுமியின் கதறல்! Reviewed by Author on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.