அண்மைய செய்திகள்

recent
-

எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக அடைந்த பெண்மணி மரணம்....


இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலாக அடைந்த பெண்மணி உடல்நலக்குறைப்பாடு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாட்டை சேர்ந்த Junko Tabei (77) என்ற பெண் அணுகுண்டு தாக்குதலால் சீரழிந்த புக்குஷிமா நகரத்தை சேர்ந்தவர்.

உலகில் உள்ள உயரமான பகுதிகளை அடைவதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இதன் அடிப்படையில் கடந்த 1975ம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார். அப்போது அவருக்கு வயது 35.

இந்த சாதனையை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக 1992ம் ஆண்டு வரை உலகில் உள்ள 7 உயரமான பகுதிகளை அடைந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது வயிற்றி புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக இவர் தொடர் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளார்.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.


எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக அடைந்த பெண்மணி மரணம்.... Reviewed by Author on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.