அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் மீது நாட்டம் மிகுந்தவரா தாய்லாந்தின் புதிய மன்னர்? வெளியான அதிர்ச்சி தகவல்....


தாய்லாந்தின் அரசர் பூமிபோல் மறைவுக்கு பின்னர் மன்னராக முடிசூடவிருக்கும் அவரது மகன் மகா வஜிரலாங்கரன் பெண்கள் விடயத்தில் மிகவும் பலகீனமானவர் என கூறப்படுகிறது.

நீண்ட 70 ஆண்டுகள் தாய்லாந்தின் மன்னராக சிறப்பான ஆட்சி நடத்திய பூமிபோல் அதுல்யாதேஜ் சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தாய்லாந்து மக்கள் 4 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மறைந்த மன்னர் பூமிபோலின் வாரீசான மகா வஜிரலாங்கரன் அடுத்த மன்னராக ஆட்சி பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர் குறித்து நேர்மறையான கருத்துகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்கோபியான வஜிரலாங்கரன் இதுவரை 3 முறை திருமணம் செய்துள்ளார். 64 வயதான இவருக்கு பெண்கள் மீது அதீத நாட்டம் உண்டு என்று கூறப்படுகிறது.

பல இளம் பெண்களுடனும் இவர் உல்லாசமாக இருந்துள்ளார் என்பது மட்டுமின்றி, குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவரையும் தாய்லாந்தில் இருந்தே நாடு கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

3 முறை திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமண உறவினால் இவர் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதனாலையே இவர் வேறு பெண்களை நாடுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஆட்சியை கவிழ்க்க புரட்சி நடந்தபோது இணையத்தில் காணொளி காட்சி ஒன்று வைரலாகியது, 2007 ஆம் ஆண்டு படம் பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட காணொளியில் இளவரசர் வஜிரலாங்கரனின் 3-வது மனைவி நிர்வாணமாக நின்று கொண்டு இவர்களது வளர்ப்பு நாயான ஃபூஃபூவுக்கு பிறந்த நாள் பாடலை பாடியுள்ளார். குறித்த நிகழ்வில் இளவரசரும் கலந்துகொண்டுள்ளார்.

மட்டுமின்றி கடந்த மே மாதம் ஜேர்மனி சென்றிருந்த இளவரசர் வஜிரலாங்கரன் அரைகுறை ஆடையுடன் வந்திறங்கியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. இளவரசருடன் சென்ற இளம் பெண் விமானப் பணிப் பெண் எனவும் அவர் இவரது 4-வது மனைவி எனவும் கூறப்படுகிறது.

கடந்த 1982 ஆம் ஆண்டு அமெரிக்க சென்றிருந்த வஜிரலாங்கரனின் தயார் ராணி சிரிகித், தமது மகன் நல்ல மாணவன் மட்டுமல்ல பெண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவன் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பெண்கள் மீது நாட்டம் மிகுந்தவரா தாய்லாந்தின் புதிய மன்னர்? வெளியான அதிர்ச்சி தகவல்.... Reviewed by Author on October 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.