மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலையில்....தமிழமுது நண்பர்கள் வட்டம்... படங்கள் இணைப்பு
தொடர்ந்துள்ள தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர்
இன்று தமது இரண்டாவது வரவை மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலையில் உறுதி செய்தனர்.
இன்று 08-11-2016 காலை ஒன்று கூடலில் அதிபர் திருமதி M.L.யூட்குருஸ் அவர்களின் அனுமதியுடன் தெரிவுசெய்யப்பட்ட 10மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
அதேவேளை நிவர்த்தி செய்து கொள்ள இவ்வாறான அமைப்புக்கள் முன்வரவேண்டும் எங்களைத்தேடிவந்து இவ்வாறான அன்பளிப்பினை வழங்கிய இவ்வமைப்பினரை அன்போடு பாடசாலைச்சமூகம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம் இவர்களது பணி எங்களைப்போன்ற பாடசாலைகள் அனைத்திற்கும் கிடைக்கவேண்டும் அதற்கு இவ்வமைப்பு திறம்பட இயங்க வேண்டும் இறைவனிடம் பிராத்திக்கின்றோம் அமைப்பு சார்பாக J.நயன் நன்றி நவிலலில் எமக்கு அனுமதி தந்த அதிபர் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அதேவேளை புலமைப்பரிட்சையில் அதிகபுள்ளிகளைப்பெறும் மாணவர்களை
கௌரவபடுத்தவுள்ளோம் எல்லா மாணவர்களும் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது விருப்பம் அதற்காகவே எம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்ய தயாராகவுள்ளோம் என்றார்.சிறப்பாக நிகழ்வு நிறைவுற்றது..

மன்-தலைமன்னார்துறை றோ.க.த.க பாடசாலையில்....தமிழமுது நண்பர்கள் வட்டம்... படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment