அஜித் மீது கோபம்: பத்து லட்ச ரூபாயை வாங்க மறுத்த கேப்டன் விஜயகாந்த்!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்க தலைவராக பதவியேற்றப் பொழுது அவர் முன் இருந்த மிகப் பெரிய பிரச்சனை நடிகர் சங்கக்கடன் தான்.
யாராலும், அடைக்க முடியாமல் இருந்த அந்த கடனை தாம் அடைக்க திட்டமிட்டார் கேப்டன் விஜயகாந்த். அவரது சிந்தனையில் உதித்தது யார் யாரோ நடிகர் நடிகைகளை அழைத்து சென்று கலை நிகழ்ச்சி நடத்தி வருவாய் ஈட்டுகிறார்களே.
அதைப் போல் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகின்ற வருவாய் முழுவதும் வங்கியில் செலுத்தி நடிகர் சங்க கடனை ஏன் அடைக்க கூடாது. அவர் அந்த திட்டத்தை நடிகர் சங்க கூட்டத்தில் சொன்ன பொழுது "எல்லா பணமும் நடிகர் சங்கத்திற்கா? நான் வர மாட்டேன் என்று சில முணு முணுப்புகளை மீறி ரஜினி, கமல் உட்பட எல்லோரும் ஏற்றுக்கொள்ள எல்லா இடங்களிலும் கலை நிகழ்ச்சி கன ஜோராக நடந்து முடிந்தது.
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் நினைத்தப்படியே பணமும் குவிந்தது முறையான வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து பணத்தை வங்கியில் செலுத்த தயாராகி கொண்டிருந்த நேரத்தில், நடிகர் சங்க தலைவர் கேப்டன் அவர்களை சந்திக்க நடிகர் அஜித் அவர்கள் வந்தார், நடிகர் சங்க கடனை அடைக்க தனது சார்பாக பத்து லட்சம் தர வந்திருப்பதாக கூறினார்.
இதைக் கேட்டதும், கோபமடைந்த விஜயகாந்த், பணத்தை வாங்க மறுத்து சங்கம் ஒன்று கூடி கலை நிகழ்ச்சி நடத்தி அதன் வருவாயை செலுத்தி கடனை அடைக்க திட்டமிடுவோம், ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் வரமாட்டீர்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் தந்த பணத்தை நான் பெற்றால் நான் அழைத்து போன நடிகர் நடிகைகளை நானே அவமானப்படுத்தியதாக அமைந்து விடும்.
அஜித் மீது கோபம்: பத்து லட்ச ரூபாயை வாங்க மறுத்த கேப்டன் விஜயகாந்த்! 
 Reviewed by Author
        on 
        
December 20, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 20, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 20, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 20, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment