சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்து கொள்ள விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -
சுவிட்சர்லாந்தில் தனது மரணத்தைத் தானே தேர்ந்தெடுக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் The Swiss Academy of Medical Science என்னும் அமைப்பும் அதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட நோயாளியின் நோய் மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாக இல்லாவிட்டாலும், நோயாளி தாங்க இயலாத கடுமையான வலியினால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் இறப்பிற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு மாறாக, Association of Swiss Doctors என்னும் அமைப்போ இந்த திட்டம், மருத்துவர்களின் அடிப்படை நோக்கமான குணமாக்க இயலாத மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களால் அவதியுறும் மக்களுக்கு உதவவேண்டும் என்னும் நோக்கத்திலிருந்து விலகச்செய்யும் என்று கூறி அதை மறுத்துள்ளது.
சமீப காலமாக Exit மற்றும் Dignitas என்னும் தற்கொலைக்கு உதவும் அமைப்புகளை நாடும் சுவிஸ் மக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது.
சுவிஸ் குடிமக்களில் பலரும் தான் எப்போது எப்படி வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டும் என்பதை முடிவு செய்வதையும், சுவிட்சர்லாந்தில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள euthanasia என்னும் தானே தன் இறப்பை முடிவு செய்யும் வழக்கத்தையும்கூட ஆதரிக்கின்றனர்.
Exit என்னும் இத்தகைய அமைப்பில் இதுவரை 86,000 பேர் தங்கள் இறப்பை முடிவு செய்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர் என்னும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்து கொள்ள விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -
 Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment