சுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகள்: வெளியான திடுக்கிடும் சம்பவம் -
குறித்த விவகாரத்தை லூசெர்ன் பொலிசாரே அறிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரிகள்,
கடந்த ஆண்டில் மட்டும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 727 எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் பாதிக்கும் அதிகமானோர் 15 வயது எட்டாதவர்கள் என குறிப்பிடும் பொலிசார், 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 455 என இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் சட்டவிரோதமான ஆபாச காட்சிகள் என கூறும் ஆய்வாளர்கள்,
இதை தடுத்து நிறுத்துவது சுலபமான விடயம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக கூறும் பொலிசார்,
கடந்த ஓராண்டில் மட்டும் சிறார்களுக்கு எதிரான விளம்பரங்கள் மட்டும் 53 எண்ணிக்கையில் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகள்: வெளியான திடுக்கிடும் சம்பவம் -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:
No comments:
Post a Comment