மன்னார் தாழ்வுபாடு கடலில் தவறி விழுந்த இளைஞன் பலி-படம்
மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று 25.11.2019திங்கட்கிழமை காலை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (வயது-23) என்ற இளைஞன் சக மீனவருடன் இன்று திங்கட்கிழமை காலை தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த படகினை குறித்த இளைஞரே ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு,சக மீனவர்களுக்கும் தகவல் வழங்கினார்.
விரைந்து வந்த சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் உயிரிழந்த நிலையில் குறித்து இளைஞன் மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Author
on
November 25, 2019
Rating:

No comments:
Post a Comment