கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டது- இராணுவம் குவிப்பு
இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா, பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபாரநிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு வவுனியா- பசார் வீதியின் ஒருபகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் நேற்று முன்தினம் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று வெளியாகியது அவர்களில் 54 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் பசார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதி என்பன சற்று முன்னர் முற்றாக முடக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதியாகியவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலினால் வவுனியா முடக்கப்பட்டது- இராணுவம் குவிப்பு
Reviewed by Author
on
January 08, 2021
Rating:
Reviewed by Author
on
January 08, 2021
Rating:


No comments:
Post a Comment