திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!
அதன்படி, ஜமாலியா- சிறிமாபுர,ஜயவிக்ரமபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 7 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வீ.பிரேமானந் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 20 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் படி நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து மூதூர் பிரதேசத்துக்கு வருகை தந்த 40 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பில் இருந்து வீட்டுக்கு விடுமுறைக்காக வருகை தந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் திருமலையில் 16 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் 46 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!
Reviewed by Author
on
January 08, 2021
Rating:
Reviewed by Author
on
January 08, 2021
Rating:


No comments:
Post a Comment