நாம் மன்னிப்பு கோருகிறோம்; யாழ்.பல்கலையிலிருந்து வெளியான அறிக்கை!
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம்.
அன்றைய இரவில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக எமது அங்கத்தவர்கள் எவராவது மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் நாம் மக்களிடம் மன்னிப்பு கோர கடமைப்பட்டுள்ளோம்.
பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாம் சமூகத்தை புறந்தள்ளி மமதையுடன் செயற்பட முடியாது.
இது தொடர்பில் நாளை (11) திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பூரண வழமை மறுப்பிற்கு எமது பரிபூரண ஆதரவையும் வழங்குகின்றோம்.
எனினும் பல்கலைக்கழகத்தில் பரீட்சை கடமைகளிலும் அதனுடன் இணைந்த கடமைகளிலும் ஈடுபடும் ஊழியர்களை பரீட்சைகள் இடம்பெறுமாயின் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் மன்னிப்பு கோருகிறோம்; யாழ்.பல்கலையிலிருந்து வெளியான அறிக்கை!
Reviewed by Author
on
January 10, 2021
Rating:
Reviewed by Author
on
January 10, 2021
Rating:



No comments:
Post a Comment