அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

 இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம் Reviewed by Author on February 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.