மன்னார் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு நடமாடும் சேவை.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அமைப்பின் அனுசரனையில் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரனின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு வலய பிரதிப்பதிவாளர் நாயகம் ந.நடராஜா மற்றும் உத்தியோகத்தர்களினால் சுகாதார வழி முறைகளை பின் பற்றி நடமாடும் சேவை இடம் பெற்றது.
இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 44 சிறுவர்களுக்கும் ,மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 39 சிறுவர்களுக்கும் , நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 12 சிறுவர்களுக்கும் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 சிறுவர்களுக்கும் பிரதி பதிவாளர் நாயகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது..
மன்னார் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு நடமாடும் சேவை.
Reviewed by Author
on
February 02, 2021
Rating:
Reviewed by Author
on
February 02, 2021
Rating:






No comments:
Post a Comment