வட இந்தியாவில் பனிப்பாறை உடைந்ததில் வௌ்ளப் பெருக்கு; 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
இதனையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வௌியேற்றப்பட்டனர்.
வௌ்ளநீரினால் வீடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
அத்துடன் ரிஷிகங்கா மின் உற்பத்தி ஆலை சேதமடைந்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஏராளமான குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
3 ஹெலிகொப்டர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடற்படையின் ஏழு சுழியோடிக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்டுக்கு ஆதரவாக இந்தியா முழுவதுமே இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென நாடு முழுவதும் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
வட இந்தியாவில் பனிப்பாறை உடைந்ததில் வௌ்ளப் பெருக்கு; 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment